LATEST NEWS
“திமுகவில் அடுத்த விக்கெட்..” மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்..? பின்னணியில் பகீர் காரணம்..!!
திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், அவர் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். அண்மையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தென் மண்டலச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இது கட்சியின் தலைமை மீது அவர் மிகுந்த அப்செட்டில் இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர அரசியலிலிருந்து விலகுமாறு குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அவர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருப்பதாகவும், விரைவில் தனது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
