“இது புதுமையா இல்ல பைத்தியக்காரத்தனமா..?” பீடிங் பாட்டிலை வாயில் வைத்து உறிஞ்சும் பெரியவர்கள்.. கஃபேயில் நடக்கும் வினோதக் கூத்து.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது புதுமையா இல்ல பைத்தியக்காரத்தனமா..?” பீடிங் பாட்டிலை வாயில் வைத்து உறிஞ்சும் பெரியவர்கள்.. கஃபேயில் நடக்கும் வினோதக் கூத்து.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

Published

on

சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தால், சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ‘சியாக்கோ’ (Ciako) என்ற கஃபேவில் பெரியவர்கள் கூட்டமாக அமர்ந்து குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலில் செர்லாக் குடிக்கும் வினோதக் கலாச்சாரம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே பிரியாணி, ரசம் மற்றும் மாங்காய் ஊறுகாய் சுவைகளில் ஐஸ்கிரீம்களை அறிமுகப்படுத்தி கவனம் ஈர்த்த இந்த உணவகம், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு அவர்களின் மழலைப் பருவ நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் இந்தப் புதிய பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹேசல்நட் மற்றும் பாதாம் விழுது, ஆவியாக்கப்பட்ட பால், முழு கொழுப்புள்ள பால், வெண்ணிலா பீன் மற்றும் செர்லாக் ஆகியவற்றைக் கலந்து சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் பதப்படுத்தித் தயாரிக்கப்படும் இந்தப் பானம், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் மாலை வேளைகளில் இளைஞர்களும் பெரியவர்களும் அங்கு திரண்டு, குழந்தைகளைப் போல ஃபீடிங் பாட்டிலை வாயில் வைத்து உறிஞ்சிக் குடிப்பதும், அதனைப் பல கோணங்களில் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும், 350 ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்கு இதன் சுவை பிரமாதமாக இல்லை என்றும், வெறும் கெட்டியான பாலில் பிஸ்கட்டைக் கரைத்துச் சாப்பிடுவது போன்ற சாதாரண சுவையையே இது தருவதாகவும் இதனை ருசித்த இன்ஃப்ளூயன்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வியாபார யுக்திக்காகப் புதுமைகளைப் புகுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முறை இந்த உணவகத்தின் முயற்சி சற்று எல்லை மீறிச் சென்றுவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in