“நான் செத்துட்டா உங்களுக்கு சந்தோஷமா?..” யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறேன்..” பண மோசடி புகாரால் மன உளைச்சலில் கதறும் பிக்பாஸ் தாமரை செல்வி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“நான் செத்துட்டா உங்களுக்கு சந்தோஷமா?..” யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறேன்..” பண மோசடி புகாரால் மன உளைச்சலில் கதறும் பிக்பாஸ் தாமரை செல்வி..!!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர் தாமரை செல்வி. திருவிழா மேடைகளில் நடனமாடும் கலைஞராக அறியப்பட்ட இவர், பிக்பாஸ் வீட்டில் 92 நாட்கள் வரை விளையாடிப் புகழ்பெற்றார். நிகழ்ச்சியின் முடிவுக்குப் பிறகு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், சமீப காலமாக எக்ஸ்போ (Expo) நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளார்.

இவ்வாறு எக்ஸ்போ போடுவதாகக் கூறி ஸ்டால் அமைக்கும் உரிமையாளர்களிடம் தாமரை செல்வி பணம் வாங்கியதாகவும், ஆனால் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, 68 பேரிடம் தலா 5,000 ரூபாய் வீதம் பணம் பெறப்பட்டதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் கொடுக்கப்பட்ட அந்தப் பணம் இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

Advertisement

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள தாமரை செல்வி, தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலை தனக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். “நான் உயிரை மாய்த்துக் கொண்டால் உங்களுக்குச் சந்தோஷமா? யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறேன், ஏன் என்னைச் சாகடிக்கிறீர்கள்?” என்று ஆவேசமாகக் கதறியுள்ளார். ஏற்கனவே தனது கணவர் பார்த்தசாரதி தன்னை விவாகரத்து செய்வதாக அறிவித்த தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களில் இருக்கும் இவர், தனது நகைகளை விற்றுவாவது உங்களது கடனை முழுமையாக அடைத்துவிடுவேன் என்றும், யாருடைய பணத்தையும் தான் ஏமாற்ற மாட்டேன் என்றும் உருக்கமாக விளக்கமளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in