“வாழும் ஆசையே சலித்துப்போனது…” பிக்பாஸ் தாமரையின் வேதனையான பதிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

CRIME

“வாழும் ஆசையே சலித்துப்போனது…” பிக்பாஸ் தாமரையின் வேதனையான பதிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! பின்னணி என்ன..?!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தாமரை செல்வி, விஜய் டிவியின் 5வது சீசனில் கலந்துகொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்து பின்பு வெளியேறினார். ஏற்கனவே முதல் கணவரைப் பிரிந்த இவர், இரண்டாவதாக பார்த்தசாரதி என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், பிக்பாஸிற்குப் பின்பு சீரியல் மற்றும் சினிமா வாய்ப்புகள் மூலம் பிஸியாகி கலக்கி வருகிறார்.

இந்நிலையில், தாமரையின் கணவர் பார்த்தசாரதி, “தாமரையும் நானும் பிரிந்துவிட்டோம்” என்று கூறி ஒரு பதிவை வெளியிட்டதுடன், தாமரையுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் தனது பக்கத்திலிருந்து நீக்கினார். கணவரின் இந்த திடீர் அறிவிப்புக்கு தாமரை தரப்பில் எந்தவொரு பதிலும் அளிக்கப்படாத நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement

தாமரைச்செல்வி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாரதி எழுதிய கவிதையை பகிர்ந்து தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “வாழ்க்கையை அறியாத வயதிலேயே அதன் வலிகளையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டேன்… வாழ்க்கையைப் புரிந்து கொண்டபோது வாழும் ஆசையே சலித்துப்போனது… உறக்கமில்லா இரவுகள், கண்ணீரோடு கழியும் தனிமைகள்…” என்ற வரிகளை சோகமான பாடலுடன் பகிர்ந்துள்ளார். தாமரையின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு அவரது விவாகரத்தை உறுதிப்படுத்துகிறதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in