CINEMA
என்னை பார்த்து எல்லாரும் பயப்படுகிறீர்கள் என்றால்.. பெருமையோடு இந்த வீட்டைவிட்டு வெளியேற தயார்.. ஒட்டுமொத்த வீட்டுக்கும் ஓப்பனா சவால் விட்ட முனியம்மாள்.. பரபரக்கும் பிக்பாஸ் வீடு..!!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நாமினேஷன் காரணமாக பிக் பாஸ் வீடு பெரும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வார கேப்டனான வினோத் பாபு, எவிக்ஷன் தடையிலிருந்து தப்பிக்க முடியாதபடி முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகிய மூவரையும் நேரடியாக நாமினேட் செய்துள்ளார்.இந்த நாமினேஷனைத் தொடர்ந்து, போட்டியாளர் முனியம்மாள் பிக் பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்களுக்கு அதிரடியான திறந்த சவால்
ஒன்றை முன்வைத்துள்ளார். தன்னை நாமினேட் செய்த வினோத் பாபுவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த வீட்டினருக்கும் சவால் விடுத்துள்ள அவர், “என்னைப்பார்த்து நீங்கள் அனைவரும் பயப்படுகிறீர்கள் என்றால், அந்தப் பெருமையோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற நான் தயார்” என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார். மேலும், தன்னைக் கண்டு பயப்படவில்லை என்றால், தன்னுடன் நேருக்கு நேர் மோதி தங்களது திறமையை நிரூபிக்குமாறும் சக போட்டியாளர்களை அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.
முனியம்மாளின் இந்த ஆக்ரோஷமான மற்றும் தைரியமான பேச்சு பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. இந்த அதிரடிப் பேச்சு அவரது பிக் பாஸ் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது ரசிகர்களின் ஆதரவோடு அவருக்குச் சாதகமாக அமையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
