ஆத்தே..! சிம்பிளாகத் தெரிந்த மேடை அலங்காரத்திற்கு ரூ.50 கோடி செலவா..? – அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு Backdrop-பில் ஒளிந்திருக்கும் ‘ஜப்பானிய ரகசியம்’ அம்பலம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

ஆத்தே..! சிம்பிளாகத் தெரிந்த மேடை அலங்காரத்திற்கு ரூ.50 கோடி செலவா..? – அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு Backdrop-பில் ஒளிந்திருக்கும் ‘ஜப்பானிய ரகசியம்’ அம்பலம்..!!

Published

on

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற மேடை அலங்காரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் , கலைநயத்துடனும் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த பேக் டிராப், ஜப்பானின் புகழ்பெற்ற பாரம்பரிய ‘ஷோஜி’ வடிவமைப்பாகும். மரச்சட்டங்களால் பின்னப்பட்டு ஒளி ஊடுருவும் வெள்ளைக் காகிதத்தால் மூடப்பட்ட இந்த அமைப்புடன், ஜப்பானிய மலர் அலங்காரக் கலையான ‘இகெபானா’ பாணியில் சிவப்பு நிற மலர்களும் இதில் இடம்பெற்றிருந்தன. மேலும், எளிமையிலும் முழுமையற்ற தன்மையிலும் அழகைக் காணும் ஜப்பானின் ‘வாபி-சாபி’ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருமணத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சர்வதேச தரத்திலான இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காகச் சுமார் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகத் திரைத்துறையில் தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கமான ஆடம்பர அலங்காரங்களைத் தவிர்த்து, எளிமைக்கும் இயற்கை அழகிற்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தம்பதிகள் செய்திருந்த இந்தப் பிரம்மாண்ட ஏற்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in