LATEST NEWS
“234 தொகுதிகளுக்கும்” தனுஷ் கொடுத்த அதிரடி உத்தரவு… 2031-க்கு முன்பே உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் நிர்வாகிகள்..!!
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனது நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் பணிகளில் நடிகர் தனுஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது தனுஷ் நற்பணி இயக்கத்தில் மாநிலம் முழுவதும் 58 அமைப்பு ரீதியான மாவட்ட அலகுகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக, தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களிலும் இதனை விரிவுபடுத்தி, 100-க்கும் மேற்பட்ட அமைப்பு ரீதியான மாவட்டங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவையில் மாவட்ட நிர்வாகிகளுடனும், சென்னையில் மகளிர் அணியினருடனும் நடிகர் தனுஷ் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
நடிகர் தனுஷ் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாதபோதிலும், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்காமல், உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்பதன் மூலம் மக்களிடையே இயக்கத்தின் செல்வாக்கை அறியவும், கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும் முடியும் என இயக்க நிர்வாகிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
