LATEST NEWS
அதிர்ச்சியில் முதல்வர் விஜய்… இளம் வாக்காளர்களை தட்டித்தூக்க தனுஷ் மாஸ்டர் பிளான்… கோட்டையை குறிவைக்கும் ‘ஏசி டியூஷன்’ அரசியல்…!!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யைத் தொடர்ந்து, நடிகர் தனுஷும் தீவிர அரசியல் பாதையைத் தேர்வு செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, முதலமைச்சர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக, மாவட்ட வாரியாக இல்லாமல் 234 தொகுதி வாரியாக பள்ளி மாணவர்களுக்குக் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி, தனது அரசியல் அஸ்திவாரத்திற்கான விதையைப் போட்டார்.
தற்போது அதே பாணியைக் கையிலெடுத்துள்ள நடிகர் தனுஷின் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ள இந்த இலவச கல்வி மையங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக சொல்லப்டுகிறது.
இவ்வாறு கல்விச் சேவையின் மூலம் புதிய மற்றும் முதல் தலைமுறை இளம் வாக்காளர்களைத் தனுஷ் குறிவைப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு தனுஷ் எடுத்து வரும் இந்த அதிரடி நகர்வுகள், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் தளத்திற்கு ஒரு சவாலாக அமையக்கூடும் என்பதால், இது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
