LATEST NEWS
“அவர் ஒரு தரித்திரம்” அவரெல்லாம் கட்சி நடத்த முடியுமா..? நடிகர் தனுஷை பகிரங்கமாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்..!!
நடிகர் தனுஷ் கட்சி ஆரம்பித்து உங்களை அழைத்தால் போவீர்களா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மிகக் கடுமையான வார்த்தைகளால் மறுப்புத் தெரிவித்துப் பதிலளித்துள்ளார். தனுஷ் போன்றவர்களை அரசியல் ரீதியாகத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளரின் கேள்விக்குத் தொடர்ந்த நாஞ்சில் சம்பத், “அவரெல்லாம் கட்சி நடத்த முடியுமா…” என்று கேள்வி எழுப்பியதுடன், தான் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா (அம்மா) ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவன் என்று தனது அரசியல் பாரம்பரியத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்ட அரசியல் ஆளுமைகளைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட தான், தனுஷ் போன்ற தரித்திரங்களையெல்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று மிகவும் காட்டமான மற்றும் அநாகரிகமான முறையில் சாடிப் பதிலளித்துள்ளார்.
