CINEMA
FLASH: இசைத்துறையில் அடுத்த பேரிழப்பு..! ஏவிஎம் ஆஸ்தான இசையமைப்பாளரின் மகனும், பிரபல இசைக் கலைஞருமான சதா காலமானார்..!!
பிரபல தமிழ் இசைக் கலைஞரான சதா காலமானார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது. இவர் ஏவிஎம் (AVM) நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கிய சுதர்சனத்தின் மகன் ஆவார். தந்தையைப் போலவே இசைத்துறையில் சிறந்து விளங்கிய சதா, ஒரு முன்னணி இசைக் கலைஞராக வலம் வந்தார்.
மறைந்த இசைக் கலைஞர் சதா, தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களில் திறம்படப் பணியாற்றிய பெருமைக்குரியவர் ஆவார். இவரது இந்த திடீர் மறைவுச் செய்தி இசைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
