“அமீரக அதிபரை நெகிழ வைத்த இந்தியர்..” நேரில் அழைத்து கட்டிப்பிடித்து கௌரவித்த நெகிழ்ச்சி வீடியோ.. சர்வதேச அளவில் குவியும் பாராட்டுக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமீரக அதிபரை நெகிழ வைத்த இந்தியர்..” நேரில் அழைத்து கட்டிப்பிடித்து கௌரவித்த நெகிழ்ச்சி வீடியோ.. சர்வதேச அளவில் குவியும் பாராட்டுக்கள்..!!

Published

on

துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தில், சக விமானியின் கொடூரத் தாக்குதலிலிருந்து பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் அவரது குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது உயரிய சிவிலியன் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30 அன்று நடந்த இச்சம்பவத்தின் போது, சக விமானி கோடரியால் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் சாதுரியமாக காக்பிட் கதவைத் திறந்து கொடுத்துள்ளார். இதனால் விமான ஊழியர்களும் பயணிகளும் இணைந்து அந்தத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்ததால் 174 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இவரின் இந்த அசாத்திய வீரத்தைப் பாராட்டி, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஸ்மித் மச்சாருக்கு “ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆஃப் சயீத் II” விருதை வழங்கியுள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு விழாவின் போது, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்திய மாலுமி ஸ்மித் மச்சாரை நேரில் வரவேற்று, அவரிடம் அன்போடு உரையாடினார். பின்னர், அவரது அசாத்திய துணிச்சலையும் கடமையுணர்வையும் பாராட்டும் விதமாக அவரை நெகிழ்ச்சியோடு கட்டிப்பிடித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். துபாயின் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் இந்திய நாட்டின் இந்தச் சாதனைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in