“இலவசமாக கொடுக்காவிட்டால் உயிரோடு விடமாட்டேன்!” காக்கிச் சட்டை திமிரில் வியாபாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“இலவசமாக கொடுக்காவிட்டால் உயிரோடு விடமாட்டேன்!” காக்கிச் சட்டை திமிரில் வியாபாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில், வியாபாரி ஒருவரிடம் இலவசமாகப் பட்டாசு கேட்டு மிரட்டிய காவலரின் செயலால் காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஜைத்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சிவ பிரதாப் சிங் சவுகான், அப்பகுதியில் பட்டாசு விற்பனை செய்து வரும் ஆகாஷ் என்பவரிடம் பணம் கொடுக்காமல் இலவசமாகப் பட்டாசுகளைக் கேட்டுள்ளார். இதற்கு வியாபாரி ஆகாஷ் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்தக் காவலர், “காவல் நிலையத்திற்கு இலவசமாகக் கொடுக்கவில்லை என்றால் உன்னை உயிரோடு வாழ விடமாட்டேன்” என்று கூறி பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்ததாகப் பாதிக்கப்பட்ட வியாபாரி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிகாரத் திமிரில் காவலர் மிரட்டல் விடுத்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்வது போல, மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே வியாபாரியை மிரட்டிப் பொருள் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் சிவ பிரதாப் சிங் மீது மஹோபா மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுப்பார்களா, அல்லது வழக்கம் போல் இந்த விவகாரம் மூடிமறைக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in