“ஒரு 1000 ரூபாய் இருந்தா போதும்…” தீபாவளி நாளில் த்ரிஷா விடுத்த நெகிழ்ச்சியான கோரிக்கை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“ஒரு 1000 ரூபாய் இருந்தா போதும்…” தீபாவளி நாளில் த்ரிஷா விடுத்த நெகிழ்ச்சியான கோரிக்கை..!!

Published

on

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆதரவின்றி மீட்கப்பட்ட நாய் ஒன்றை தான் தத்தெடுத்துள்ளதாக பிரபல நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட விலங்குகள் மீது எப்போதும் தனி அன்பு கொண்ட அவர், பண்டிகை காலத்தில் இந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நெகிழ்ச்சியான முடிவை எடுத்துள்ளார்.

மேலும் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள த்ரிஷா, வெறும் ரூ.1,000 இருந்தால் மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதத்திற்கான உணவை வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, “நீங்களும் என்னுடன் இணைந்து ஒரு நாயின் உணவுச் செலவுக்காக ரூ.1,000 பணத்தை ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவிற்கு நன்கொடையாக அளியுங்கள்; இந்த தீபாவளியை ஆதரவற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக மாற்றுவோம்” என்று ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்பான கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in