“சினிமாவை மிஞ்சிய சேஸிங்..” 1 கி.மீ தூரம் தம்பதியைத் துரத்திய மர்ம வேன்… அபார்ட்மெண்ட் வாசலில் கும்பல் செய்த காரியம்… வைரலாகும் திகில் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சினிமாவை மிஞ்சிய சேஸிங்..” 1 கி.மீ தூரம் தம்பதியைத் துரத்திய மர்ம வேன்… அபார்ட்மெண்ட் வாசலில் கும்பல் செய்த காரியம்… வைரலாகும் திகில் வீடியோ..!!

Published

on

தீபாவளி இரவில் குருகிராமில் நிகழ்ந்த ஒரு திகிலூட்டும் சம்பவம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுபம் ஜெயின் என்ற நபரும் அவரது மனைவியும் தீபாவளி அன்று இரவு காரில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, செக்டர் 70 தர்பாரிபூர் சாலை அருகே ஒரு மர்ம வாகனம் அவர்களை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சினிமா பட பாணியில் பின்தொடர்ந்துள்ளது. தொடக்கத்தில் அந்த வாகனம் தங்களை முந்திச் செல்ல முயல்வதாகவே அவர்கள் நினைத்துள்ளனர்; ஆனால், திடீரென அவர்கள் காரின் முன்பு வந்து குறுக்கே பிரேக் அடித்து வழியை மறிக்க முயன்றபோதுதான் ஏதோ விபரீதம் நடக்கப் போவதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து பயந்துபோன அவர், தன் காரின் வேகத்தை அதிகரித்து தனது வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாயில் வரை காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த மர்ம வாகனமும் பலமுறை அவர்களின் பாதையை குறுக்கிட்டு தடுத்து நிறுத்த முயன்றதுடன், குடியிருப்பு கேட் வரை அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது. இறுதியில், அந்த குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் உரிய நேரத்தில் தலையிட்டு அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியதால் தம்பதியினர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். இருப்பினும், அந்த வாகனத்தில் வந்தவர்கள் கேட் நுழைவாயிலில் சுமார் 20 நிமிடங்கள் நின்று பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளே நுழைய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த பயங்கரமான அனுபவத்தை சுபம் ஜெயின் தனது காரின் டேஷ்கேம் மற்றும் சிசிடிவி காட்சிகளுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டதை அடுத்து, குருகிராம் காவல்துறை இச்சம்பவம் குறித்து கவனம் செலுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ அல்லது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவோ விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தாலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த தீவிரமான விவாதங்களை எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in