அதெப்படி பணம் வந்தது..?.. தீபாவளி பரிசால் தவெக MLA-க்கள் கடும் வெக்ஸ்.. உள்கட்சியில் வெடித்த பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதெப்படி பணம் வந்தது..?.. தீபாவளி பரிசால் தவெக MLA-க்கள் கடும் வெக்ஸ்.. உள்கட்சியில் வெடித்த பூகம்பம்..!!

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த அமைச்சர்கள் பலர் பரிசுப் பொருட்களை வாரி இறைத்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம், தற்போது அக்கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பையும், பிரச்சனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்கு எனத் தனியாக நிதி (பார்ட்டி ஃபண்ட்) கிடையாது என்றும், தங்களுக்குச் சொத்துக்கள் ஏதும் இல்லை என்றும் தவெகவினர் கூறி வந்த நிலையில், இவ்வளவு பெரிய அளவில் பரிசுகளை வழங்க அவர்களுக்குப் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ளது.

Advertisement

மறுபுறம், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) பலர் தங்களது மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பிச் செயல்பட்டு வரும் சூழலில், அமைச்சர்களின் இந்த ஆடம்பரப் பரிசு விநியோகத்தைப் பார்த்து அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in