LifeStyle
“தயவுசெஞ்சு யாரும் இப்படி பண்ணாதீங்க..” ஓடும் SUV காரில் இருந்து பட்டாசு வீசிய நபர்… வீடியோ வைரலான அடுத்த கணமே போலீஸ் கொடுத்த தடாலடி ஆக்ஷன்..!!
குஜராத் மாநிலம் சூரத்தின் கௌரவ் பாத் பகுதியில் தீபாவளிப் பண்டிகையின்போது, சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த எஸ்யூவி காரில் இருந்து பட்டாசுகளைக் கொளுத்தி வீசிய விபரீத செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையில் சென்ற பிற வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்த இந்த அத்துமீறல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பரவலான கண்டனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தீவிர நடவடிக்கையில் இறங்கிய பால் பகுதி காவல்துறையினர், சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டிய நபரை அடையாளம் கண்டு பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். காவல்துறையின் விசாரணையில் பிடிபட்ட நபர் ஆஷிஷ் படேல் என்பது தெரியவந்தது.
தனது பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயலின் தீவிரத்தை உணர்ந்த அவர், பொதுமக்களிடம் கைகூப்பி பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். மேலும், சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற ஆபத்தான காரியங்களை யாரும் ஒருபோதும் செய்ய வேண்டாம் என்றும், பொது இடங்களில் விழிப்புணர்வோடும் பொறுப்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
