“அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..” தினமும் ஒரு கையளவு இதை சாப்பிட்டா போதும்.. மருத்துவ செலவை மிச்சப்படுத்தும் அதிசய விதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..” தினமும் ஒரு கையளவு இதை சாப்பிட்டா போதும்.. மருத்துவ செலவை மிச்சப்படுத்தும் அதிசய விதை..!!

Published

on

உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். அந்த வகையில், அளவில் சிறியதாக இருந்தாலும் ஏராளமான சத்துக்களைக் கொண்ட பூசணி விதைகளில் புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவற்றைச் சிற்றுண்டியாகவோ அல்லது சாலட் உள்ளிட்ட உணவுகளுடனோ சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக, தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இதய தசைகளின் சீரான செயல்பாடு மேம்படுவதுடன், ஜிங்க் சத்து நிறைந்துள்ளதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு பெறவும், காயங்கள் விரைவில் குணமடையவும் உதவுகிறது.

மேலும், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகளைச் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதுடன், அடிக்கடி நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குறைந்து உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. எனினும் இதில் கலோரிகள் அதிகம் என்பதால் இவற்றை அளவோடு சாப்பிடுவது அவசியம். அதுமட்டுமின்றி, பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் தரத்திற்கு முக்கியமானது என்பதால், ஆண்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

இவற்றுடன், பூசணி விதைகளில் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதோடு, இதில் உள்ள ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவி நல்ல தூக்கத்தைப் பெற வழிவகுக்கிறது. பூசணி விதைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்ற போதிலும், அவற்றை முறையான மருத்துவ ஆலோசனையுடன் அளவோடு எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in