CRIME
“அடக்கடவுளே.. காரின் ஜன்னலை திறக்காதது ஒரு குற்றமா..?” ஆப்பிள் மேனேஜருக்கு நேர்ந்த கொடூரம்.. முன்னாள் காவலருக்கு நீதிமன்றம் கொடுத்த மரண அடி தீர்ப்பு..!!
லக்னோவில் உள்ள பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஏரியா சேல்ஸ் மேனேஜராகப் பணிபுரிந்த விவேக் திவாரி கொலை வழக்கில், நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் 28-29 நள்ளிரவில், கோமதி நகர் விரிவாக்கப் பகுதியில் தனது தோழியுடன் காரில் இருந்த விவேக் திவாரியை, ஜன்னலைத் திறக்க மறுத்ததால் ரோந்துப் பணியில் இருந்த காவலர் பிரசாந்த் சவுத்ரி துப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற விவேக், ஷஹீத் பாத் சுரங்கப்பாதை தூணில் மோதி, அதிக ரத்தப்போக்கு மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கை விசாரித்த நீதிமன்றம், துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் பிரசாந்த் சவுத்ரியைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது, அதே சமயம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மற்றொரு காவலரான சந்தீப் குமாரை விடுவித்துள்ளது.
கொலைக்கு இணையற்ற மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக முன்னாள் காவலர் பிரசாந்த் சவுத்ரி குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் தொடக்கத்திலேயே அவர் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரசாந்த் சவுத்ரிக்கான தண்டனை விபரங்களை நீதிமன்றம் வரும் செப்டம்பர் 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
