LATEST NEWS
அதிர்ச்சி..! 4 ஆண்டுகள் ஒரே அறையில் தங்கியிருந்த தோழி… திடீரென நடந்த அந்த சம்பவத்தால் ஷாக்… மருத்துவ மாணவியின் உருக்கமான பதிவு..!
லக்னோவில் ஒன்றாக எம்பிபிஎஸ் படித்து வந்த தோழியின் பாலின மாற்ற செய்தி தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது நெருங்கிய தோழி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ரத்த பந்தங்களை விடவும் மேலான ஒரு நட்பாகத் தங்களுக்குள் இருந்த உறவு, தற்போது முற்றிலும் மாறிவிட்டதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லக்னோவில் மருத்துவப் படிப்பு படித்தபோது எனக்கும் நிதா கானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் உணவைப் பகிர்ந்து கொண்டு, எம்பிபிஎஸ் படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடு வாழ்ந்து வந்தோம். ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களில் துணையாக இருந்த நிலையில், கடந்த அக்டோபர் 22 அன்று மருத்துவமனையில் இருந்து 4 நாட்கள் விடுப்பு எடுத்துச் சென்ற நிதா கான், அதன்பின் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை; அவரது மொபைல் எண் அணைக்கப்பட்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இன்று தான் நிதா கான் தனது பாலின அடையாளத்தை மாற்றி, ‘யூசுப் கான்’ எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டதோடு, திருமணமும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவலை மற்றவர்கள் மூலம் அறிந்தேன். ஒருவருடைய தனிப்பட்ட விருப்பங்களில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், நான்கு ஆண்டுகள் ஒன்றாகக் கனவுகளைப் பகிர்ந்த என்னிடம், இந்த முடிவை ஒரு வார்த்தை கூட சொல்லத் தோன்றவில்லையா என்ற கேள்வி என் மனதை வாட்டுகிறது” என அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
