LATEST NEWS
இந்த நிலை எப்போதான் மாறுமோ..? திடீர் வயிற்றுவலி.. குழந்தையை பெற்றெடுத்த 13 வயது சிறுமி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில், 13 வயது சிறுமி ஒருவர் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலி காரணமாக மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்குச் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்தச் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் தனது உறவினர் ஒருவருடன் வசித்து வந்ததாகவும், அந்த நபர் மூலமாகவே இந்த கர்ப்பம் ஏற்பட்டது என்றும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அந்த நபரைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த போதிலும், அவர் சட்டப்படி மைனர் என்பதால், காவல் துறையினர் இந்த விவகாரத்தைக் கடுமையான குற்றவியல் வழக்கப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞரைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
