CRIME
“பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்..” இளைஞரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்ற இருவர்.. நடந்தது என்ன..? நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் புடாவ்ன்பகுதியில், பட்டப்பகலில் ரோஹித் ஜாதவ் என்ற தலித் இளைஞர் கத்தியால் குத்திக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது ரயீஸ் மற்றும் முகமது வாரிஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ரோஹித் ஜாதவ் மீது இரக்கமின்றி கத்தியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரத் தாக்குதலின் போது ரோஹித்துடன் இருந்த அவரது நண்பர் ஒருவரும் படுகாயமடைந்து, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் அரங்கேறிய இந்தப் படுகொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
