LATEST NEWS
வெள்ளை முட்டையா..? பிரவுன் முட்டையா..? ஆரோக்கியத்திற்கு எது பெஸ்ட்..? குழப்பத்திற்கு இதோ முற்றுப்புள்ளி..!!
புரதச்சத்து, நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாக முட்டை விளங்குகிறது. வெள்ளை நிற முட்டை, பழுப்பு நிற முட்டை இதில் எந்த முட்டையை உட்கொள்வது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தினமும் சாப்பிட எது சிறந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகள் இரண்டிலும் புரதச்சத்து, நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றின் அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். எனவே, முட்டை ஓட்டின் நிறத்தை வைத்து ஒரு முட்டை மற்றொன்றை விட ஆரோக்கியமானது என்று கூற முடியாது. முட்டையின் ஊட்டச்சத்து மதிப்பைத் தீர்மானிப்பது கோழிகளுக்கு வழங்கվும் தீவனத்தின் தரமே தவிர, முட்டையின் நிறம் அல்ல.
ஆரோக்கியமான முட்டைகளைத் தேர்வு செய்யும்போது, திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகள் (Free Range), கூண்டில் அடைக்காமல் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகள் (Cage Free), ஆர்கானிக் மற்றும் ஒமேகா-3 சத்து அதிகரிக்கப்பட்ட முட்டைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. முட்டையின் நிறத்தை வைத்து எது சிறந்தது என்று முடிவு செய்யாமல், கோழி வளர்க்கப்பட்ட முறை மற்றும் அதன் தீவனத்தின் தரத்தைக் கவனித்துத் தேர்வு செய்வதே ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
