“புயல் நேரத்தில் கடலுக்குள் போக அனுமதி தந்தது யார்..?” நடுக்கடலில் நடந்த சோகம்.. 9 மீனவர்கள் பலி..! அரசின் அலட்சியத்தை சாடி உதயநிதி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“புயல் நேரத்தில் கடலுக்குள் போக அனுமதி தந்தது யார்..?” நடுக்கடலில் நடந்த சோகம்.. 9 மீனவர்கள் பலி..! அரசின் அலட்சியத்தை சாடி உதயநிதி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Published

on

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 9 மீனவர்களின் படகு முரசு புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் கடலில் மூழ்கி மீனவர்கள் மாயமான நிலையில், அவர்களது உடல்கள் ஆந்திர கடலோரம் கரை ஒதுங்கியுள்ளது. இந்த நிலையில் புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.

Advertisement

புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது? உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.

இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in