ஐயோ.! “காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்”.. ஆந்திராவில் கரை ஒதுங்கிய 6 சடலங்கள்.. கடலோரக் கிராமங்களில் உறைந்த சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ.! “காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்”.. ஆந்திராவில் கரை ஒதுங்கிய 6 சடலங்கள்.. கடலோரக் கிராமங்களில் உறைந்த சோகம்..!!

Published

on

ஆந்திர மாநிலத்தின் கோத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரைகளில் 6 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்குச் சென்று மாயமான நிலையில், தற்போது இந்தச் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாயமான மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது கடலோரக் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரை ஒதுங்கியுள்ள 6 சடலங்களில், முதற்கட்டமாக மோகன் என்பவரின் உடல் மட்டும் தற்போது அடையாளம் காணப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சடலங்கள் யாருடையது என்பதை மீனவர்களின் குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்து உறுதி செய்ய வேண்டியுள்ளது. அவர்களது குடும்பத்தினர் உடல்களைப் பார்த்து உறுதி செய்த பிறகே, மற்ற மீனவர்களின் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களில் 6 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் காசிமேடு பகுதி மீனவ மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். எஞ்சிய மீனவர்களின் நிலை என்ன என்பது குறித்து கடலோரக் காவல் படையினர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in