“அடேங்கப்பா.. பிறந்தவுடனேயே கின்னஸ் உலக சாதனை..!” பெண் குழந்தையைப் பார்த்து மருத்துவர்களே மிரண்டு போன அதிசயம்.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேங்கப்பா.. பிறந்தவுடனேயே கின்னஸ் உலக சாதனை..!” பெண் குழந்தையைப் பார்த்து மருத்துவர்களே மிரண்டு போன அதிசயம்.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்று, பிறக்கும்போதே 7 சென்டிமீட்டர் நீளமுள்ள அடர்த்தியான தலைமுடியுடன் பிறந்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. முனகபாகா மண்டலத்திற்கு உட்பட்ட உம்மலாடா கிராமத்தைச் சேர்ந்த பவானி மற்றும் சந்தீப் தோரா தம்பதியினருக்குக் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அதன் தலையில் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அடர்த்தியான, கருமையான முடி இருப்பதைக் கண்டு பிரசவம் பார்த்த மருத்துவர்களே பெரும் வியப்படைந்தனர்.

பின்னர் அந்தக் குழந்தையின் தலைமுடியை அளந்து பார்த்தபோது, அது சுமார் 7 சென்டிமீட்டர் நீளம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பிறந்தவுடனேயே இத்தகைய அரிய சிறப்பைப் பெற்ற இந்தக் குழந்தையின் சாதனையை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்த கின்னஸ் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதிகள், குழந்தைக்குச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கிக் கௌரவித்துள்ளனர். பிறந்தவுடனேயே உலக சாதனை படைத்துள்ள தங்கள் குழந்தையின் இந்த அபூர்வச் சாதனையைப் பெற்றோரும், உறவினர்களும், கிராம மக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in