CRIME
பகீர்.. 2 நாட்களாக மாயமான மனைவி… செல்போன் சிக்னலைத் தேடிச் சென்ற போலீசுக்கு லாட்ஜ் அறையில் காத்திருந்த அதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் பின்ணணி..!!
ஆந்திரா விஜயவாடாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்த பைடிஷெட்டி எர்ரம்மா என்ற பெண், கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என அவரது கணவர் சூர்யாராவ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், எர்ரம்மாவின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், அவர் கடைசியாகப் பேருந்து நிலையம் அருகே இருந்ததைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ராமையா லாட்ஜ் அறை ஒன்றிற்குள் எர்ரம்மா சடலமாகக் கிடந்ததைக் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், ராமு என்ற இளைஞருடன் எர்ரம்மா அந்த லாட்ஜிற்கு வந்ததாகவும், அங்கு அவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அறையைப் பூட்டிவிட்டு ராமு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்; தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
