CRIME
அடக் கொடுமையே.. மருந்து கொடுப்பதில் மாமியாருடன் சண்டை.. அடுத்த நொடியே மருமகள் செய்த காரியத்தால் அதிர்ந்த குடும்பம்.. பகீர் பின்னணி..!!
ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டம் சீதாநகரம் மண்டலம் ஸ்ரீராம் நகரில், மாமியார் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் மென்பொருள் ஊழியராகப் பணியாற்றி வரும் வீரபாணி என்பவருக்கும், சத்யா ஷியாமளாம்பிகா என்பவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன; இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது கணவருக்கு மருந்து (சிரப்) கொடுப்பது தொடர்பாக சத்யா ஷியாமளாம்பிகாவிற்கும் அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது மாமியார் திட்டியதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சத்யா ஷியாமளாம்பிகா, விபரீத முடிவெடுத்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமணமான நான்கு ஆண்டுகளில் இரண்டரை வயதுப் பிஞ்சுக் குழந்தையைத் தவிக்கவிட்டு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
