அம்மாடியோ.. கிராமத்திற்குள் புகுந்த 13 அடி ராட்சத ராஜநாகம்… அடுத்து நடந்த திக் திக் நிமிடங்கள்.. அலறியடித்து ஓடிய கிராம மக்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ.. கிராமத்திற்குள் புகுந்த 13 அடி ராட்சத ராஜநாகம்… அடுத்து நடந்த திக் திக் நிமிடங்கள்.. அலறியடித்து ஓடிய கிராம மக்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

ஆந்திரா அனகாபள்ளி மாவட்டம் வி. மதுகுலா மண்டலத்திற்கு உட்பட்ட கே.ஜே. புரம் கிராமத்தில், சுமார் 13 அடி நீளமுள்ள பிரம்மாண்டமான ராஜநாகம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தின் மசூதி தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றிற்குள் அந்த ராட்சதப் பாம்பு ஊர்ந்து சென்றதை அங்கிருந்தவர்கள் முதலில் பார்த்துள்ளனர்.

மிகப்பெரிய உருவத்துடன் காணப்பட்ட அந்த ராஜநாகத்தைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உயிர்ப் பயத்தால் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். யாரும் அதன் அருகில் செல்லத் துணியாத நிலையில், உடனடியாகப் பாம்பு பிடிக்கும் வீரரான வெங்கடேஷுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in