CRIME
“உச்சக்கட்ட பரபரப்பு… வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய கணவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி..” 2 குழந்தைகளுடன் மாயமான மனைவி.. திடுக்கிடு பின்னணி..!!
ஹைதராபாத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மர்மமான முறையில் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்லம்பள்ளியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மீனாட்சி தம்பதியினர் பிழைப்புத் தேடி ஹைதராபாத் வந்து, பாபுல் ரெட்டி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ராஜ்குமார், வழக்கம் போல் இந்த மாதம் 13-ஆம் தேதி மாலை 7 மணியளவில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஆனால், அப்போது வீட்டில் அவரது மனைவி கரெட்டி மீனாட்சி (29) மற்றும் அவர்களது குழந்தைகளான ஹிமான்ஷு (7), சஹஸ்ரா (4) ஆகிய மூவரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர்கள், தெரிந்தவர்கள் வீடுகள் எனப் பல இடங்களில் ராஜ்குமார் தீவிரமாகத் தேடியுள்ளார். எங்கு தேடியும் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், மனமுடைந்த ராஜ்குமார் மைலார்தேவ்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காணாமல் போனவர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
