மக்களை ஏமாற்றும் பெப்சிகோ..! “எனர்ஜி டிரிங்க்ஸ்னு சொல்லி ஏமாத்துறாங்க” – ஸ்டிங், அட்ரினலின் ரஷ் பானங்கள் குறித்து FSSAI அதிரடி குற்றச்சாட்டு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களை ஏமாற்றும் பெப்சிகோ..! “எனர்ஜி டிரிங்க்ஸ்னு சொல்லி ஏமாத்துறாங்க” – ஸ்டிங், அட்ரினலின் ரஷ் பானங்கள் குறித்து FSSAI அதிரடி குற்றச்சாட்டு…!!

Published

on

பெப்சிகோ நிறுவனம் தனது ‘ஸ்டிங்’ மற்றும் ‘அட்ரினலின் ரஷ்’ போன்ற பானங்களை ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ என்று கூறி நுகர்வோரை வேண்டுமென்றே ஏமாற்றுவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த பானங்கள் அனைத்தும் அதிகப்படியான காஃபின் கொண்ட பானங்கள் என்ற பிரிவின் கீழ் மட்டுமே வரும் என்பது பெப்சிகோ நிறுவனத்திற்கு நன்றாகவே தெரியும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் FSSAI வாதிட்டுள்ளது.

சந்தையில் ஆற்றல் தரும் பானங்கள் என்ற பெயரில் விற்கப்படும் இதுபோன்ற தயாரிப்புகள் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த அதிரடி வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனர்ஜி டிரிங்க்ஸ் என்ற லேபிளைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்தும் நிறுவனங்களின் விளம்பர உத்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in