LATEST NEWS
கவின் ஆணவக்கொ**யில் சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்தது செல்லும்.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
கவின் ஆணவக் கொலை வழக்கில் இருந்து சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து இன்று (நவம்பர் 5, 2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கவின் வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு கிரிமினல் வழக்கை எப்படி எவ்விதத்திலும் கையாளக் கூடாதோ, அவ்வாறுதான் இந்தக் கவின் வழக்கு கையாளப்பட்டிருக்கிறது எனத் நீதிமன்றம் சாடியுள்ளது. தமிழக அரசின் வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என உறுதி செய்துள்ளது.
கவின் என்ற வாலிபர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது இந்தத் தீர்ப்பின் மூலம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
