CRIME
நெல்லை பெண் வழக்கில் திடீர் திருப்பம்..! போலீசாரையே ஏமாற்ற நினைத்த கணவன்: மனைவியின் மர்ம மரண முடிச்சை அவிழ்த்த சிசிடிவி காட்சி..!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி பகுதியில், வனோபி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் அருணாச்சலமே கொலையாளி என்பது சிசிடிவி காட்சிகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அருணாச்சலத்தைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டில் வனோபி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் அருணாச்சலமே பாப்பாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தபோது, கணவன் அருணாச்சலமே தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தங்களின் 4 வயது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தப்பியோடிய அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அருணாச்சலத்தை விரைந்து செயல்பட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 4 வயதுக் குழந்தையைப் பத்திரமாக மீட்ட காவல்துறையினர், வனோபியின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்டாகிராம் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், கொலைக்கான முழுமையான பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
