அடிப்பாவி.. கணவனைத் தீர்த்துக்கட்ட வங்கியில் ரூ.45,000 லோன் எடுத்த மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி ஏவித் தீர்த்துக்கட்டிய பகீர் சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

அடிப்பாவி.. கணவனைத் தீர்த்துக்கட்ட வங்கியில் ரூ.45,000 லோன் எடுத்த மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி ஏவித் தீர்த்துக்கட்டிய பகீர் சம்பவம்..!!!

Published

on

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தௌலத்பூர் சிம்ரி கிராமத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த முகமது இர்பான் என்பவருக்கும் நேஹா பர்வீன் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த அருண் என்ற இளைஞருடன் நேஹாவுக்குத் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் இர்பானுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் பலமுறை தனது மனைவியைக் கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.

கணவரின் தொடர் எதிர்ப்பால் ஆத்திரமடைந்த நேஹா, தனது கள்ளக்காதலன் அருணுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டச் சதித்திட்டம் தீட்டினார். இதற்காகக் கூலிப்படையினரிடம் 90,000 ரூபாய் பேரம் பேசிய நேஹா, முன்பணம் கொடுப்பதற்காக வங்கியில் 45,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். திட்டமிட்டபடியே தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி நேஹா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், கணவர் இர்பான் வீட்டில் தனியாக இருந்தபோது கதவைத் தட்டிய கூலிப்படையினர், அவர் கதவைத் திறந்த அடுத்த நொடியே தலையில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுச் சம்பவ இடத்திலேயே கொடூரமாகக் கொலை செய்தனர்.

Advertisement

இந்தப் படுகொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், செல்போன் அழைப்பு விவரங்கள் (Call Records) மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாகவே வழக்கின் மர்மத்தைத் துலக்கினர். காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில், கணவனைக் கொல்ல வங்கியில் கடன் வாங்கிய மனைவி நேஹா பர்வீன், அவரது கள்ளக்காதலன் அருண் மற்றும் கூலிப்படை கொலையாளி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in