“என் மாமியாருக்கும் இது எல்லாமே தெரியும்…” 20 வருடமாக 6 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய கணவனின் முகத்திரையைக் கிழித்த மனைவி.. அதிர்ச்சி பின்ணணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மாமியாருக்கும் இது எல்லாமே தெரியும்…” 20 வருடமாக 6 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய கணவனின் முகத்திரையைக் கிழித்த மனைவி.. அதிர்ச்சி பின்ணணி..!!

Published

on

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்துப் போலி ஆவணங்கள் மூலம் ஆறு இந்துப் பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜுமுதீன் அகமது என்ற நபர் மீது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி, திருமணத்திற்கு முன்பு ரஞ்சு முசாஹரி என இருந்த தனது பெயர் திருமணத்திற்குப் பிறகு ஃபரிதா பேகம் என மாற்றப்பட்டதாகவும், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது கணவர் ஜுமுதீன் அகமது பல போலிப் பெயர்களைப் பயன்படுத்திப் பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ராஜு போரா, உத்பால் போரா, உத்பால் சைகியா போன்ற பல்வேறு இந்துப் பெயர்களில் போலி அடையாள அட்டைகளையும் ஆவணங்களையும் உருவாக்கி, 2001-ஆம் ஆண்டில் தேஜ்பூரைச் சேர்ந்த போடோ இனப் பெண்ணை ‘ராஜு போரா’ என்ற பெயரில் திருமணம் செய்ததுடன், தொடர்ந்து கார்பி ஆங்லாங், கலியாபோர் மற்றும் தேஜ்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் பல பெண்களையும் அவர் திருமணம் செய்துள்ளார்.

தனது கணவரின் இந்த மோசடித் திருமணங்களுக்குத் தனது மாமியாரும் உடந்தையாக இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜுமுதீனின் மற்ற திருமணங்கள் குறித்து மாமியாருக்கு ஏற்கனவே நன்கு தெரியும் என்றும், இது குறித்துத் தான் கேள்வி எழுப்பியபோது அதனை மூடிமறைக்க முயன்ற மாமியார், கணவரின் மற்ற திருமணங்களை நியாயப்படுத்திப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் சமீபத்திய மனைவியிடம், தங்களது திருமணம் நீதிமன்றத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாமியாரே பொய் சொல்லி நம்ப வைத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, நாகோன் மாவட்டத்தின் ஹடோவல் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அசாம் காவல்துறையினர், ஜுமுதீன் அகமதுவைக் கைது செய்துள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் தாயார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண், 2001-ஆம் ஆண்டு முதல் தான் அனுபவித்து வந்த துயரங்களுக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளதாகக் கூறி அசாம் முதலமைச்சருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்ததாகவும், ஆனால் தனது கணவர் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க வற்புறுத்தியதாலேயே பொறுமையிழந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்; தற்போது தனது தங்கை தனக்கு உதவி வருவதாகவும், அவர் வேலைக்குத் திரும்பிய பிறகு தன்னையும் தனது குழந்தையையும் யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற எதிர்காலக் கவலை தனக்கு இருப்பதாகவும் அந்தப் பெண் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in