அய்யோ நெஞ்சே பதறுது.. இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கிய ஒற்றைத் துப்பட்டா… மாணவியின் தலைமுடியோடு தலையின் தோலும் பிய்ந்து வந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ நெஞ்சே பதறுது.. இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கிய ஒற்றைத் துப்பட்டா… மாணவியின் தலைமுடியோடு தலையின் தோலும் பிய்ந்து வந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், கால்நடைகளுக்குத் தீவனம் வெட்டும் இயந்திரத்தின் பெல்ட்டில் துப்பட்டா சிக்கியதில் மாணவி ஒருவர் படுகாயமடைந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரத்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்காக அந்த மாணவி கைப்பிடியைச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதில் அவர் அணிந்திருந்த துப்பட்டா இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கிக் கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் இயந்திரம் அவரை இழுத்ததில், அவரது தலைமுடி பின்னலுடன் சேர்ந்து தலையின் மேற்பகுதி தோலும் தனியாகப் பிய்த்து எடுக்கப்பட்டது.

இந்தக் கோர விபத்தால் வலியால் அலறித் துடித்த மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை உடனடியாக மீட்டு ஹர்தோய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது, மாணவியின் சகோதரர் இயந்திரத்தில் சிக்கித் தனியாகப் பிய்ந்து வந்த தலையின் தோல் மற்றும் தலைமுடி பின்னலை ஒரு பையில் பத்திரமாக எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்த காட்சி அங்கிருந்தவர்களை உறைய வைத்தது.

Advertisement

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் குழு உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்கியுள்ளது. கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் இதுபோன்ற தீவனம் வெட்டும் இயந்திரங்களை இயக்கும்போது, தளர்வான ஆடைகள் மற்றும் துப்பட்டாக்களை அணிவதால் ஏற்படும் பேராபத்து குறித்து இந்த நெஞ்சை உலுக்கும் விபத்து மீண்டும் ஒருமுறை கடுமையான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in