“என் காதலனைத்தான் திருமணம் செய்வேன்..” அடம்பிடித்த 19 வயது மகள்.. இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது பெற்ற தந்தை செய்த கொடூரச் செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் காதலனைத்தான் திருமணம் செய்வேன்..” அடம்பிடித்த 19 வயது மகள்.. இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது பெற்ற தந்தை செய்த கொடூரச் செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் நார்மூர் அருகே உள்ள உம்மி கிராமத்தில், காதல் திருமணம் செய்து கொள்வேன் எனப் பிடிவாதம் பிடித்த 19 வயது மகளைப் பெற்ற தந்தையே கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, அதனைத் தற்கொலை என நாடகமாடிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உம்மி கிராமத்தைச் சேர்ந்த ஆதி கைலாஷ் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகளுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், மூன்றாவது மகளான கல்யாணிக்கு (19) நல்ல வரன் அமைந்ததால் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், தான் ரோஹித் என்ற இளைஞரைக் காதலிப்பதால் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என கல்யாணி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

மகளின் காதல் விவகாரத்தைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ஆதி கைலாஷ், அக்காவுக்குத் திருமணமாகாத நிலையில் நீ காதல் திருமணம் செய்தால் குடும்பத்தின் ஒட்டுமொத்த கௌரவமும் கெட்டுவிடும் என மகளைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இருப்பினும், தான் காதலனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என கல்யாணி பிடிவாதமாகக் கூறியதால் ஆத்திரமடைந்த தந்தை, இரவு தூங்கிக் கொண்டிருந்த மகள் கல்யாணியின் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினரை நம்ப வைப்பதற்காகச் சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டதுடன், உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அதிகாலையிலேயே மகளின் உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்துள்ளார்.

Advertisement

கல்யாணியின் திடீர் மரணம் மற்றும் அவசர அவசரமாக உடல் எரிக்கப்பட்டதில் சந்தேகமடைந்த உள்ளூர் மக்கள், இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் தந்தை ஆதி கைலாஷைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப கௌரவத்திற்காக மகளைக் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஆதி கைலாஷைக் கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in