“இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கு.. திரும்பிப் போய் சுற்றி வாங்க..!” ATC அதிகாரியின் அவசர எச்சரிக்கை.. அடுத்த நொடியே விமானி எடுத்த சாமர்த்திய முடிவு.. வைரலாகும் ஆடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கு.. திரும்பிப் போய் சுற்றி வாங்க..!” ATC அதிகாரியின் அவசர எச்சரிக்கை.. அடுத்த நொடியே விமானி எடுத்த சாமர்த்திய முடிவு.. வைரலாகும் ஆடியோ..!!

Published

on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த திகிலான தருணத்தில், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுஅதிகாரி விடுத்த அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து விமானி சாமர்த்தியமாக விமானத்தை மீண்டும் வானில் பறக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடுபாதையை நெருங்கிக் கொண்டிருந்த அந்த விமானம் இன்னும் சில வினாடிகளில் தரையைத் தொட இருந்த நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரி, “இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.. திரும்பிப் போய் வானில் சுற்றி வாருங்கள்” என விமானிக்கு அவசர உத்தரவு பிறப்பித்தார்.

கட்டுப்பாட்டு அதிகாரியின் எச்சரிக்கையைக் கேட்ட அடுத்த நொடியே, சற்றும் தாமதிக்காமல் துரிதமாகச் செயல்பட்ட விமானி, தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு விமானத்தை மீண்டும் பாதுகாப்பாக வானத்தை நோக்கி உயர்த்தினார். நிலநடுக்கத்தின் போது ஓடுபாதையில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது விமானம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகவோ அதிக வாய்ப்புள்ள நிலையில், விமானியின் இந்த மின்னல் வேக முடிவும், கட்டுப்பாட்டு அதிகாரியின் சரியான நேரத்திலான எச்சரிக்கையும் விமானத்திலிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

Advertisement

நில அதிர்வு முழுமையாக நின்று ஓடுபாதையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே, அந்த விமானம் மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிக்கும் இடையே நடந்த இந்தத் திகிலான உரையாடலின் ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நெருக்கடியான சூழலிலும் பதற்றப்படாமல் பயணிகளைப் பாதுகாத்த விமானி மற்றும் ATC அதிகாரியின் சாமர்த்தியத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in