“6 வருட காதல் திருமணம்… சபரிமலை மாலையால் ஏற்பட்ட வாக்குவாதம்… வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! தாய் கிளப்பிய பகீர் சந்தேகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“6 வருட காதல் திருமணம்… சபரிமலை மாலையால் ஏற்பட்ட வாக்குவாதம்… வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! தாய் கிளப்பிய பகீர் சந்தேகம்..!!

Published

on

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் சங்கீதா, காதலித்து திருமணம் செய்த கணவர் சந்தோஷுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் தம்பதியினரிடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்த நிலையில், சந்தோஷ் சபரிமலைக்கு மாலை அணியப்போவதாகக் கூறியதற்கு சங்கீதா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று காலை 6 மணிக்கு சந்தோஷ் வேலைக்குச் சென்ற பிறகு, வீட்டில் தனியாக இருந்த சங்கீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலை 8.30 மணிக்கு வீடு திரும்பிய சந்தோஷ் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து, புழல் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரைத்தனர்.

Advertisement

இறுதிச்சடங்கிற்காக வியாசர்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சங்கீதாவின் உடலைப் பார்த்து அவரது தாய் பரமேஸ்வரி, மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம்சாட்டி சந்தோஷ் மற்றும் அவரது தாயைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in