DEVOTIONAL
“அன்று தடுத்த அதிகாரிகளே இன்று சல்யூட் அடிப்பார்கள்”.. திருப்பரங்குன்றம் மலைத்தூண் தீப விவகாரத்தில் ராம ரவிக்குமாரின் வைரல் சபதம் நிஜமானது எப்படி? உள்ளே பரபரப்பு பின்னணி…!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்திய மனுதாரர் ராம ரவிக்குமார் கடந்த ஆண்டு ஆவேசமாகப் பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீதிமன்ற உத்தரவை மறுத்துத் தடுத்த அதிகாரிகளே ஒருநாள் சல்யூட் அடித்து, தங்களை அழைத்துச் சென்று மலைத்தூணில் தீபம் ஏற்ற வைப்பார்கள் என்று அவர் அந்த வீடியோவில் சபதம் ஏற்றிருந்தார்.
ஆகம விதிகள் மற்றும் பழமையான மரபுகளின்படி மலை உச்சியில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என வாதிட்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கு இந்த விவகாரத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் காவல்துறையின் பலத்த பாதுகாப்போடு, அனுமதி பெற்ற 50 பக்தர்கள் மலை மேல் அழைத்துச் செல்லப்பட்டு தீபம் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராம ரவிக்குமார் சபதம் ஏற்ற அந்தப் பழைய வீடியோ காட்சியை அவரது ஆதரவாளர்களும் இந்து அமைப்பினரும் பகிர்ந்து, “அன்று சொன்னதும், இன்று நடந்ததும்!” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
