DEVOTIONAL
“அப்போ இனி உங்க காட்டுல அடைமழைதான்..!” அடுத்த 64 நாட்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும்… சுக்கிரனின் ஆசியைப் பெறும் 4 ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க..!!
ஜோதிட ரீதியாகக் சுக்கிர பகவான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, களத்திரம், சொகுசு மற்றும் ஆனந்தத்தை அள்ளித் தரும் முதன்மையான கிரகமாகத் திகழ்கிறார். வழக்கமாக 28 முதல் 30 நாட்களுக்குள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் சுக்கிரன், செப்டம்பர் 2-ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும். இந்த முறை சிறப்பு அம்சமாக, அக்டோபர் 3-ஆம் தேதி துலாம் ராசியிலேயே சுக்கிரன் வக்கிர நிலையை அடைவதால், வழக்கமான நாட்களை விட அதிகமாக சுமார் 64 நாட்கள் 4 ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது .
சமேஷ ராசி
நீண்ட நாட்களாக வராமல் நிலுவையில் இருந்த பண நிலுவைகள் கைக்கு வந்து சேரும் யோகம் உண்டாகிறது. நிதி நெருக்கடிகள் விலகி கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெறுவதோடு, சமூகத்தில் செல்வாக்கும் மரியாதையும் உயரும். கைநழுவிப் போன சொத்துக்களை மீண்டும் மீட்டெடுக்கும் வாய்ப்புகள் உருவாகி, தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்துவந்த மன உளைச்சல்கள் நீங்கி மனநிம்மதியும் ஸ்திரத்தன்மையும் கிட்டும்.
மிதுனம் ராசி
இக்காலம் மிகச்சிறப்பான நன்மைகளை அள்ளித் தரும். மிதுன ராசியினரின் இல்லங்களில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடி வருவதுடன், வியாபாரத்தில் எதிர்பாராத லாபமும் தொழிலில் புதிய முன்னேற்றமும் ஏற்படும். சவாலான காரியங்களைக்கூட மிக எளிதாக முடித்து சாதனை படைப்பர்.
தனுசு ராசி
தொழிலிலும் குடும்பத்திலும் அடுத்தடுத்து நற்செய்திகள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும் என்றாலும், சொத்து மற்றும் பத்திரம் சார்ந்த விவகாரங்களில் மட்டும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.
கும்ப ராசி
இக்காலகட்டத்தில் மனதில் புதுவிதமான எண்ணங்களும் எதிர்காலம் குறித்த தெளிவான திட்டமிடல்களும் தோன்றும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் சாதகமான முடிவுகள் வந்து சொத்துக்கள் கைக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும், நட்பு வட்டாரங்களிலும் புதிய நபர்களிடம் பழகும்போதும் சற்று எச்சரிக்கையாக இருப்பது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வராமல் தடுக்கும். இந்த நான்கு ராசியினருக்கும் சுக்கிரனின் வக்கிரப் பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டத்தையும் நிதி மேன்மையையும் தரவுள்ளது.
