DEVOTIONAL
அடேங்கப்பா..! புதாதித்ய ராஜயோகத்தால இந்த நாலு ராசிக்கு இனி செம கொண்டாட்டம்!… உங்க ராசி இதுல இருக்கா…?!
சூரியன் மற்றும் புதன் ஆகிய இரு முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் சேரும்போது மிகவும் சக்திவாய்ந்த ‘புதாத்திய ராஜயோகம்’ உருவாகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் ஆன்மா, தலைமைத்துவம் மற்றும் கௌரவத்தின் காரகராகவும், புதன் புத்தி கூர்மை, பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்தின் காரகராகவும் விளங்குகின்றனர். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்களையும், பெரும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கவுள்ளது.
இந்த புதாதித்ய யோகத்தின் மூலம் அதிர்ஷ்டம் பெறவுள்ள முக்கிய ராசிகளாக மேஷம்,சிம் சிம்மம்,மகரம் மற்றும் கும்பம் ஆகியவை அமைகின்றன. மேஷ ராசியினருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும், எதிர்பாராத நிதி லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால், அவர்களுக்குப் பணியிடத்தில் புதிய பதவிகளும், வருமான உயர்வுடன் கூடிய பெரிய அங்கீகாரமும் கிடைக்கும். மகர ராசியினருக்கு நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடைவதுடன், புதிய தொழில் வாய்ப்புகளும் வெளிநாட்டுப் பயண யோகமும் தேடி வரும்.
மேலும், கும்ப ராசியினருக்கு இந்த யோகமானது குடும்பத்தில் மகிழ்ச்சியையும், வியாபாரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இரட்டிப்பு லாபத்தையும் தரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், கடன் பிரச்னைகளில் இருந்தும் விடுதலை பெற முடியும். மொத்தத்தில், இந்த அதிர்ஷ்டக் காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் நல்ல வெற்றியைத் தரும்.
