சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்..! இனிமேல் இந்த 4 ராசிகளுக்கு கஷ்டமெல்லாம் விலகி ராஜயோகம் ஆரம்பமாகப்போகுது… உங்க ராசியும் இதுல இருக்கான்னு பாருங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்..! இனிமேல் இந்த 4 ராசிகளுக்கு கஷ்டமெல்லாம் விலகி ராஜயோகம் ஆரம்பமாகப்போகுது… உங்க ராசியும் இதுல இருக்கான்னு பாருங்க..!!

Published

on

ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அப்படியாக, சுக்கிரனின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதியம் 12.55 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் அதிபதியான சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். பிறகு அவர் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அங்கேயே சஞ்சரிப்பார். சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியால் ஒரு சில ராசியினருக்கு மிக பெரிய அளவில் முன்னேற்றம் தொழில் வளர்ச்சி உண்டாகும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மேஷ ராசிக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி இவர்களுக்கு திடீர் பொருளாதார வளர்ச்சி, வேலையில் முன்னேற்றம் கொடுக்கப்போகிறார். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள், மற்றும் புதிய நபரின் அறிமுகத்தால் தொழில் ரீதியாக புதிய ஏற்றம் பெறுவீர்கள். ரிஷப ராசிக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியில் குடும்ப வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் விலகும். மனதில் நேர்மறையான ஆற்றல் பெருகும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உங்கள் சிந்தனையில் உள்ள குழப்பம் விலகும். விலகி சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள்.

Advertisement

துலாம் ராசிக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி இவர்களுக்கு மனதில் புது வித சிந்தனை தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் மற்றும் கவலைகள் மறையும் காலம் ஆகும். நீண்ட நாள் வழக்குகள் முடிவிற்கு வரும். வெளிநாடு செல்லவேண்டும் என்ற கனவுகள் நிறைவேறும். தர்ம காரியங்களில் மனம் அதிக ஈடுபடுத்திக் கொள்ளும். சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும். வேலையில் மரியாதை உயரும். தைரியமாக முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நெருங்கியவரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in