CRIME
“பிறந்தநாள் விழாவில் தொடங்கிய கொடூரம்…” 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து 1 ஆண்டாக நடந்த அநீதி.. 14 பேர் கொண்ட கொடூர கும்பல்.. குலைநடுங்க வைக்கும் பின்னணி..!!
சேலம் கொண்டலாம்பட்டி பகுதிச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழிகளான 16 மற்றும் 17 வயதுடைய இருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற இச்சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு தோழிகள் இருவரும் தங்கள் ஆண் நண்பர்களை அழைத்து வந்துள்ளனர். அப்போது விழாவுக்கு வந்த கும்பல், சிறுமிகளுக்குக் கட்டாயப்படுத்தி மதுபானம் வழங்கிப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. தொடர்ச்சியாக சிறுமிகளைக் கண்காணித்து வந்த இந்த கும்பல், அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மதுபோதையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி பள்ளிக்குத் தொடர்ந்து வராததால் சந்தேகம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட அவரது தாயார், உடனடியாகக் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அதிகாரிகளின் விசாரணையில், தோழிகள் மற்றும் அவர்களின் ஆண் நண்பர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல் ஓராண்டாகத் தொடர் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 4 பேரைக் கைது செய்துள்ளனர்; மேலும் தலைமறைவாக உள்ள எஞ்சிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
