CRIME
“இனிமேல் நீ எனக்கு மட்டும்தான்..!” காதலி முகத்தில் காதலன் செய்த கோரச் செயல்.. 2 ஆண்டுகளாக சைக்கோபோல் நடத்திய கொடூரம்… நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சிச் சம்பவம்..!!
இங்கிலாந்தில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான லீ யேட்ஸ் என்பவருடன் டெய்சிக்கு ஏற்பட்ட உறவு, காலப்போக்கில் கடுமையான துஷ்பிரயோகங்கள் நிறைந்த நரகமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் மிகுந்த அன்பாகப் பழகிய யேட்ஸ், போகப்போக டெய்ஸியின் அன்றாட வாழ்க்கை முறைகள், ஆடைத் தேர்வுகள் மற்றும் தூக்க நேரம் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கழிப்பறைக்குச் செல்வதைக் கண்காணிப்பது, நேரத்தைக் கணக்கிட்டுக் கோபப்படுவது போன்ற அராஜகங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
தன்னுடைய கட்டுப்பாட்டை மீறுபவர்களை மிரட்டுவதுடன், டெய்சி மீது துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற கொடூரமான செயல்களிலும் யேட்ஸ் ஈடுப்பட்டுள்ளார். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடும் சித்திரவதைகளை அனுபவித்த டெய்சி, எதிர்த்துப் பேச முடியாத அளவிற்குப் பயந்த நிலையிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு வாகன நிறுத்துமிடத்தில் அவர் தாக்கப்படுவதைக் கண்ட அண்டை வீட்டுக்காரர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் விரைந்து வந்து இந்தத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
தான் எதிர்கொண்ட தொடர்ச்சியான துன்புறுத்தல்களை ஒரு நாட்குறிப்பில் எழுதி வைத்து வந்த டெய்சி, காவல்துறையினரிடம் அது குறித்த அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யேட்ஸ் மீது லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிராக வெளிவந்துள்ள இந்தச் செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
