CRIME
“பூட்டிய அறைக்குள் இருந்து வந்த அழுகுரல்…” கதவை உடைத்த போலீஸ்.. உள்ளே காத்திருந்த நெஞ்சை உலுக்கும் பயங்கர காட்சி.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் உள்ள அமல்தாஸ் காலனியில், ஜோதி சௌராசியா என்ற 35 வயது பெண்மணி அவரது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஜோதியின் கணவர் மனோஜ் சௌராசியா தனது வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்கு அங்கு ஒரு நெஞ்சை உலுக்கும் காட்சி காத்திருந்தது.
அங்கு ஜோதி சௌராசியா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த நிலையில், அவரது 5 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறு குழந்தைகள் பக்கத்து அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக உணவும் தண்ணீரும் இன்றி அந்தப் பூட்டிய அறைக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்த அக்குழந்தைகளை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கொலையாளி ஜோதியைக் கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் அறையில் பூட்டிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரக் கொலைக்குக் குடும்பத் தகராறு காரணமா அல்லது மர்ம நபர்களின் கைவரிசையா என்பது குறித்து சத்தர்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
