“ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை பெண் அதிகாரி..!” வியாபாரி செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் பரவும் வீடியோ! – cinefeeds
Connect with us

CRIME

“ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை பெண் அதிகாரி..!” வியாபாரி செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் பரவும் வீடியோ!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹிந்துபூர் வணிக வரித்துறை அதிகாரியான கிருஷ்ணவேணி, வியாபாரி ஒருவரிடம் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சிகள் கேமராவில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளிடம் இருந்து கிருஷ்ணவேணி ஒவ்வொரு மாதமும் மாமூல் வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரிடம் லஞ்சம் கொடுத்த சிறு வியாபாரி ஒருவர், அவர் பணம் வாங்குவதைத் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து அம்பலப்படுத்தியுள்ளார்.

தங்களிடம் இருந்து வசூலித்த லஞ்சப் பணத்தைக் கொண்டு கிருஷ்ணவேணி கர்னூல் நகரில் மூன்று மாடிக் கட்டிடம் கட்டி வருவதாக வியாபாரிகள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணாவின் தனி உதவியாளரின் முழு ஆதரவு இருப்பதாலேயே, எவ்வித அச்சமும் இன்றி கிருஷ்ணவேணி துணிகரமாக லஞ்சம் வசூலித்து வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in