“நான் எங்க அம்மாவை குத்திட்டேன்.. உதவி பண்ணுங்க…” ஸ்கூல் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த அந்த மெசேஜ்.. தாயைக் கத்தியால் குத்திவிட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.. பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

CRIME

“நான் எங்க அம்மாவை குத்திட்டேன்.. உதவி பண்ணுங்க…” ஸ்கூல் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த அந்த மெசேஜ்.. தாயைக் கத்தியால் குத்திவிட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.. பின்னணி என்ன..?!

Published

on

அசாம் தலைநகர் குவஹாத்தியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு, பின்னர் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு பாமுனிமைதாம் பகுதியில் உள்ள வீட்டில், அந்த மாணவன் தனது தாயின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தாயை தாக்கியதற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

தாயை தாக்கிய பிறகு வீட்டை விட்டு வெளியேறிய மாணவன், தனது பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளான். அதில், தான் தனது தாயை தாக்கிவிட்டதாகவும், வீட்டின் முகவரியைக் கண்டறிந்து அவருக்கு உதவுமாறும் மற்றவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளான். அந்தச் செய்தியின் மூலமே இச்சம்பவத்தின் தீவிரம் தெரியவந்த போதிலும், அதற்குள் அந்த மாணவன் வீட்டை விட்டு வெகுதூரம் சென்றிருந்தான்.

Advertisement

பின்னர் குவஹாத்தியின் ஏபிசி பகுதிக்குச் சென்ற மாணவன், அங்குள்ள ஒரு உயரமான அடுக்குமாடி கட்டிடத்தின் மாடிக்குச் சென்று கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டான். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம், படுகாயமடைந்த மாணவனின் தாய் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தின் பின்னணியில் குடும்பப் பிரச்சனை உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in