LATEST NEWS
FLASH: கொல்கத்தா-சாய்ராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து.. காலையிலேயே அதிர்ச்சி..!!
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள டிகாரு பகுதியில் இன்று (நவம்பர் 11) காலை கொல்கத்தா – சாய்ராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் சுமார் 6 முதல் 7 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன.
இந்த கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் தடம் புரண்டதற்கான சரியான காரணம் குறித்து ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
