“அவர் ஒரு பாலியல் குற்றவாளி…” கணித ஆசிரியரைக் கொன்றுவிட்டு போர்டில் எழுதி வைத்துச் சென்ற கொலையாளி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவர் ஒரு பாலியல் குற்றவாளி…” கணித ஆசிரியரைக் கொன்றுவிட்டு போர்டில் எழுதி வைத்துச் சென்ற கொலையாளி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் ஜகதீஷ்புரா பகுதியில் உள்ள அவாஸ் விகாஸ் காலனியில் செயல்பட்டு வந்த பயிற்சி மைய உரிமையாளரும், கணித ஆசிரியருமான ஓம் பிரகாஷ் யாதவ் கொலை வழக்கில் காவல்துறை இறுதியாகத் துப்பு துலக்கியுள்ளது. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் மாயமாகியிருந்த அவரது உடல், நவம்பர் 6-ஆம் தேதி வி.எஸ். பிளாசா பயிற்சி மையத்திற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த நகர துணை ஆணையர் ரவீந்திர குமார் தலைமையிலான காவல்துறையினர், ஆசிரியரின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது தனது முன்னாள் மாணவி ஒருவருக்கு அவர் அடிக்கடி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பியிருந்தது தெரியவந்தது.

காவல்துறையினர் அந்த மாணவியிடம் ஆதாரங்களைக் காட்டி விசாரித்தபோது, கணித ஆசிரியர் ஓம் பிரகாஷ் யாதவ் ஸ்னாப்சாட் செயலியில் இருந்த தனது தனிப்பட்ட புகைப்படங்களை வைத்துத் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆசிரியர் தனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிவிட்டு, அதைப் பார்த்தவுடன் அழித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்தக் கொடுமையிலிருந்து விடுபட நினைத்த மாணவி, தனது நண்பரான ஷாகஞ்சைச் சேர்ந்த நிகில் என்பவரிடம் ஆசிரியரின் அத்துமீறல்கள் குறித்துத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து நிகில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசிரியரை எச்சரித்த போதிலும் அவர் பணியாததால், நவம்பர் 2-ஆம் தேதி கத்தியுடன் பயிற்சி மையத்திற்குள் நுழைந்த நிகில், வாக்குவாதத்தின் போது ஆசிரியரைச் சரமாரியாகக் குத்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு பயிற்சி மையத்தின் கரும்பலகையில் “ஓ.பி. யாதவ் ஒரு பாலியல் குற்றவாளி” என எழுதி வைத்துவிட்டு, ஆசிரியரின் செல்போனை உடைத்து எறிந்துவிட்டு அவரது ஸ்கூட்டரிலேயே நிகில் தப்பிச் சென்றுள்ளார். தற்போது குற்றவாளி நிகிலைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடமிருந்த ஆசிரியரின் ஸ்கூட்டரையும் மீட்டுத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in