“பகீர்.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்ற நபரின் வெறிச்செயல்..” தப்பி ஓடி தாயிடம் அழுத சிறுமி.. போலீஸ் நிலையத்தில் குற்றவாளிக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“பகீர்.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்ற நபரின் வெறிச்செயல்..” தப்பி ஓடி தாயிடம் அழுத சிறுமி.. போலீஸ் நிலையத்தில் குற்றவாளிக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எம். புதுப்பாக்கம் கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடித் தனது தாயிடம் அழுதபடியே நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர், வெங்கடேஷை உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, காவல் நிலையத்தில் இருந்தபோது பாத்ரூமுக்குச் சென்ற வெங்கடேஷ் வழுக்கி விழுந்ததில் அவரது கை முறிந்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், வெங்கடேஷ் மீது ஏற்கனவே பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட நபரைச் சுதந்திரமாக நடமாட விட்டதே இத்தகைய கொடூரச் செயலுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in